வியட்னாம் நீர்வீழ்ச்சிக்கு அருகே பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் மூவர் இறந்துகிடந்தனர்

ஹனோய்: வியட்னாமில் உள்ள ஒரு நீர்விழ்ச்சிக்கு அருகே பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் மூவர் இறந்துகிடந்ததாக வியட்னாம் காவல்துறையினர் தெரிவித் துள்ளனர். அந்த மூவரில் இருவர் பெண்கள் என்றும் ஒருவர் ஆடவர் என்றும் கூறப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு அருகே அந்த மூவரும் நீந்திக்கொண்டிருந்த தாகவும் அவர்கள் உயிர்காப்பு ஆடைகள் அணிந்திருந்ததாகவும் எதிர்பாராத விதமாக அம்மூவரும் அருவி நீரில் அடித்துச் செல்லப் பட்டதாகவும் அந்த மூவரின் வழிகாட்டியான 26 வயது இளையர் கூறினார்.

நீர்வீழ்ச்சிக்கு அருகில் அந்த மூவரின் சடலங்களை மீட்புக் குழுவினர் நேற்று மீட்டனர். இறந்தவர்கள் 18 வயது, 25 வயதுடைய இரு பெண்கள் என்றும் மற்றொருவர் 25 வயது ஆடவர் என்றும் பத்திரிகைத் தகவல்கள் கூறின. வியட்னாம் நீர்வீழ்ச்சிக்கு அருகே பிரிட்டிஷ் நாட்டவர்கள் மூவர் இறந்ததை ஹனோயில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் உறுதிப்படுத்தியது. அந்த மூவரின் குடும்பத்தினருக்கு ஆழ்த்த அனுதாபங்களைத் தூதரகம் தெரிவித்துக் கொண்டது. வியட்னாம் அதிகாரிகளுடன் அணுக்கத் தொடர்புகொண் டுள்ளதாகவும் தூதரக பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.