நூடல்சில் கண்ணாடித் துண்டுகள்; மருத்துவமனையில் ஏழு மாணவர்கள்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கண்ணாடித் துண்டுகள் கலந்த நூடல்ஸ் உணவைச் சாப்பிட்ட ஏழு மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சென்ற புதன் கிழமை அரசாங்க உணவுத் திட்டத்தின்கீழ் அவர்களுக்கு அளிக்கப்பட்ட மீ கொரெங்கில் கண்ணாடித் துண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கி ஹியோங், “பயணத்தில் உணவு விநி யோகிக்கும் லாரியின் சன்னல் கண்ணாடி உடைந்து உணவுப்பொருட்களில் விழுந்திருக்கலாம் என்று பிள்ளை களின் பெற்றோர் சந்தேகிக்கின்றனர்,” என்றார். கண்ணாடித் துண்டுகள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில மாணவர்களுக்கு வாந்தியும் வயிற்றுக் கோளாறும் ஏற்பட்டது.