சவுத் கேரொலினாவில் ஹில்லரிக்கு பெரும் வெற்றி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட் டியில் சவுத் கேரொலினா மாநிலத் தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹில்லரி கிளிண்டன் மகத்தான வெற்றியைப் பெற்றுள் ளார். சவுத் கேரொலினாவில் ஹில் லரி வெற்றி பெறுவார் என்று பர வலாக எதிர்பார்க்கப்பட்டது. இது, வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் 11 மாநில அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஹில்லரிக்கு புதிய உத்வேகத்தைத் தந்துள் ளது. “இதே பிரசாரம் நாளை நாடு முழுவதும் பரவும்,” என்று பலத்த கைதட்டலுக்கு இடையே ஹில்லரி முழங்கினார். அவரிடம் மோதி தோல்வி அடைந்தவர் ஜனநாயகக் கட்சி யின் மற்றொரு வேட்பாளரான சேன்டெர்ஸ். ஏறக்-குறைய அனைத்து வாக்கு களும் எண்ணப்பட்ட நிலையில் ஹில்லரி, சேன்டெர்சைவிட 50 புள்ளிகள் முன்னிலை வகித்தார். பத்தில் எட்டு கறுப்பின வாக் காளர்கள் ஹில்லரிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்று தேர் தல் கணிப்புகள் கூறுகின்றன.

இது, நான்கு இடங்களில் நடைபெற்ற வேட்பாளர் போட்டியில் ஹில்லரிக்கு 3வது வெற்றியாகும். இதற்கு முன் ஒஹையோ, நிவாடாவில் ஹில்லரி வெற்றி பெற்றார். ஆனால் நியூ ஹேம்ப் ‌ஷியரில் சேன்டர்சிடம் ஹில்லரி தோற்றார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுத் கேரொலினா அதிபர் வேட் பாளர் தேர்வில் அப்போதைய செனட்டர் பராக் ஒபாமாவிடம் ஹில்லரி தோல்வியடைந்தார். ஆனால் இப்போது நிலைமை வேறு. சவுத் கேரொலினாவில் ஆதரவாளர்களிடம் பேசிய ஹில் லரி, “அமெரிக்காவில் நாம் ஒன்று பட்டு இருந்தால் எத்தகைய தடை களையும் உடைப்பதற்கு தடை இருக்காது என்ற செய்தியை தெரி வித்துள்ளீர்கள்,” என்றார். குடியரசுக் கட்சியில் தொழில் அதிபர் டிரம்ப் தொடர்ந்து முன் னணி வகிக்கிறார். புதன்கிழமை நிவாடாவில் அவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி, அவரைத் தடுத்து நிறுத்த முடியாத தொடக்கத்தைத் தந்துள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.