நஜிப் மீதான $375மி. ஊழல் புகாருக்கு அமைச்சர் மறுப்பு

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சவூதி இளவரசர் 375 மில்லியன் அமெரிக்க டாலர் (1.5 பில் லியன் ரிங்கிட்) பரிசாக வழங்கி யதாக வெளியான செய்தியை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தாஜுதின் அப்துல் ரஹ்மான் மறுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் கடந்த திங் கட்கிழமை முதல் ஃபேர் கார்னர்ஸ் என்னும் நிகழ்ச்சியில் திரு நஜிப் தொடர்புடைய ஊழல் குற்றச் சாட்டுகளை வெளியிட்டு வரு கிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2011ஆம் ஆண்டு சவூதி இளவரசர் 375 அமெரிக்க டாலரை திரு நஜிப்புக்குப் பரிசாக வழங்கி யதாக புதிய தகவல் ஒன்றை அது வெளியிட்டது.

அதற்கு ஆதாரமாக சவூதி இளவரசர் எழுதிய கடிதம் ஒன்றையும் அந்த செய்தி நிறு வனம் வெளியிட்டது. இது குறித்து நேற்று மலேசிய நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தாஜுதின், இது ஒரு செய்திதான். அந்தக் குற்றச்சாட்டு உண்மை யா என்று தெரியாது. சவூதி இள வரசர் எழுதியதாக ஏபிசி வெளி யிட்டுள்ள கடிதத்தின் நம்பகத் தன்மையை முதலில் சரிபார்க்க வேண்டும் என்றார். மலேசிய விவசாய, விவசாயம் சார்ந்த துறைகளுக்கான துணை அமைச்சருமான திரு தாஜுதின், "பிரதமர் நஜிப்பை வெறுப்பவர்கள் இதுபோன்ற ஏராளமான குற்றச் சாட்டுகளைக் கூறுகிறார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!