ஆடம்பரப் பொருட்கள் வாங்க நஜிப் 15 மி. டாலர் செலவிட்டதாகத் தகவல்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அரசாங்க முதலீட்டு நிறுவனத்திலிருந்து அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடப் பட்டதாகக் கூறப்படும் பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் ஆடம்பரப் பொருட்கள் வாங்கிய தாக வால் ஸ்திரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. விடுமுறையைக் கழிப்பதற்கும் விலை உயர்ந்த உடை மற்றும் நகைகள் வாங்குவதற்கும் நஜிப் 15 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிட்டிருப்பதாகவும் அந்த நாளேடு செய்தி வெளியிட்டுள் ளது. 2011ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடைப் பட்ட காலத்தில் திரு நஜிப் அந்தப் பொருட்களை வாங்கியதாகவும் அந்த நாளேட்டின் தகவல் கூறுகிறது. அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளிலும் மற்ற இடங்களிலும் உள்ள கடைகளில் அந்தப் பொருட்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திரு நஜிப் அவரது வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதி களுக்கும் சிந்தனையாளர்கள் குழுவினருக்கும் வழக்கறிஞர் களுக்கும் மில்லியன் கணக்கான டாலர் பணம் கொடுத்திருப்ப தாகவும் மலேசிய அதிகாரிகளின் புலன்விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று வால் ஸ்திரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது. 1எம்டிபி நிதி விவகாரம் குறித்த சர்ச்சை நீடிக்கும் வேளையில் வால் ஸ்திரீட் ஜர்னல் மீண்டும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. திரு நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கில் 1எம்டிபி நிறுவனத் திலிருந்து 700 மில்லி யன் அமெரிக்க டாலர் பணம் மாற்றிவிடப்பட்டதாக மலேசிய அதிகாரிகளின் புலன்விசாரணை யில் தெரியவந்துள்ளது என்று அந்த நாளேடு சென்ற ஆண்டு ஜூலை மாதம் செய்தி வெளி யிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!