தென்தாய்லாந்து குண்டு வெடிப்புகளில் பலர் காயம்

பட்டானி: தென்தாய்லாந்தின் பட்டானி மாநிலத்தில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. மலேசிய எல்லைக்கு அருகே முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மாநிலங்களில் ஒன்றான பட்டானியில் அடுத்தடுத்து 10 குண்டுகள் வெடித்ததாக அதிகாரிகள் கூறினர்.

முடிதிருத்தும் கடைக்கு அருகே அந்த குண்டுகள் வெடித்ததாகவும் குண்டு வெடிப்பில் சிக்கிய ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்ததாகவும் ராணுவப் பேச்சாளர் கூறினார். அந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவுப் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் தனிநாடு கேட்டு போராடி வரும் பிரிவினைவாதிகளே அத்தாக்குதலை நடத்தியிருக் கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிப்பதாக பேங்காக் தகவல்கள் கூறுகின்றன.

தென்தாய்லாந்தில் முடிதிருத்தும் கடைக்கு அருகே குண்டு வெடித்தில் உயிரிழந்த ஒரு ஆடவரின் உறவினர்கள் அந்தக் கடையை சுத்தப்படுத்துகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!