ஜப்பானின் போர்க்கப்பலுக்கு வரவேற்பு

ஜப்­பா­னின் நீர்­மூழ்­கிக் கப்பல் ஒயா­‌ஷியோ, 2 நாச­கா­ரிப் போர்க்­கப்­பல்­களு­டன் சர்ச்சைக் குரிய தென்­சீ­னக் கடல் பகு­திக்கு அருகே உள்ள பிலிப்­பீன்­சின் துறை­மு­கத்தை நேற்று அடைந்தது. அக்­கப்­பல்­களை பிலிப்­பீன்ஸ் கடற்­படை வீரர்­கள் மேள தாளத்­து­டன் வர­வேற்­ற­னர். அண்டை நாடு­களின் கடற்­படை­களுக்கு இடை­யே­யான கடற்­துறை ஒத்­துழைப்பு மேம்­­­படுத்­து­வது, வட்­டா­ரத்­தில் அமைதி, நிலைத் தன்மையை மேம்படுத்­து­வது போன்றவையே இந்தக் கப்­பல்­கள் வருகை­யின் நோக்கம் என பிலிப்­பீன்ஸ் கடற்­படைப் பேச்­சா­ளர் லியுட் லின்­குனா கூறினார். அமெ­ரிக்­கா­வும் பிலிப்­பீன்­சும் இன்று முதல் 12 நாட்­களுக்கு இரா­ணு­வப் பயிற்­சி­யில் ஈடு­ப­ட­வுள்­­­ளன. அதைத் தொடர்ந்து ஜப்­­­பா­­­னின் நீர்­மூழ்கி, போர்க்­கப்­பல்­­­களின் வருகை அமைந்­துள்­ளது.

சீனா­வின் இறை­யாண்மைக்­குத் தீங்கு விளை­விக்­கும் வகை­யில் நடந்­து­கொள்­ளக்­ கூ­டாது என மற்ற நாடு­களுக்கு சீனா எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­ வேளை­யில் அமெ­ரிக்­கா­வும் பிலிப்­பீன்ஸ் போர்ப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளன. இருந்­தும் இப்­ப­யிற்­சி­கள் சீனாவை குறி வைத்து நடத்­தப்­ப­ட­வில்லை என்று அந்­நா­டு­கள் வலி­யு­றுத்தியுள்­ளன. அமெ­ரிக்­கா­வு­டனான ராணுவ ஒப்­பந்தப்­படி பீலிப்­பீன்ஸ் தனது ஐந்து இரா­ணு­வத் தளங்களில் அமெ­ரிக்­கக் கடற்­படைக்கு இடம் தரு­வ­தற்­குத் தயா­ராகி வரு­கிறது. அவற்­றில் ஒரு தளம், சர்ச்சைக்­கு­ரிய தென்­சீ­னக்­க­டலை எதிர்­நோக்­கி­ய­வாறு உள்­ளது.

சர்ச்சைக்­கு­ரிய தென்­சீ­னக் கடல் பதற்­றத்தைத் தணிக்­கும் வகை­யில் ஜப்­பா­னு­டனான நல்­லு­றவை­யும் பிலிப்­பீன்ஸ் மேம்படுத்த விரும்­பு­கிறது. ராடார் தொழில் நுட்­பம், ராணு­வத் தள­வா­டங்கள் போன்ற­வற்றை பிலிப்­பீன்­சுக்கு வழங்­கு­வ­தற்கு ஜப்­பான் இசைந்­துள்­ளது. சீனா தென்­சீ­னக் கடல் பகு­தி­யின் முக்­கால் பகு­திக்கு சொந்தம் கொண்டாடி வரு­கிறது. அதேபோல் தைவான், புருணை, வியட்னாம், மலே­சியா, பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­களும் சொந்தம் கொண்டாடி வரு­கின்றன. இந்த நாடு­கள் அனைத்­தும் உரிமை கோரும் இந்த கடற்­ப­குதி எண்­ணெய் வளம் கொண்ட­தா­கக் கூறப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!