கிரீஸிலிருந்து துருக்கிக்கு திருப்பி அனுப்பப்படும் குடியேறிகள்

ஏதென்ஸ்: கிரீஸிலிருந்து குடியேறிகளை துருக்கி நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை கிரீஸ் அதிகாரிகள் தொடங்கியுள் ளனர். குடியேறிகளை ஏற்றிக் கொண்டு பல படகுகள் லெஸ்பாஸ் தீவிலிருந்து நேற்று துருக்கிக்கு புறப்பட்டன. துருக்கியின் மேற்குப் பகுதியில் உள்ள டிகிலி பகுதிக்கு குடியேறிகள் அனுப் பப்பட்டு வருகின்றனர். குடியேறிகள் 500 பேர் துருக்கிக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக துருக் கிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். துருக்கியுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில நாட்களுக்கு முன்பு உடன்பாடு கண்டன. அந்த உடன்பாட்டின் கீழ் துருக்கிக்கு குடியேறிகள் திருப்பி அனுப்பப் படுவதாக கிரீஸ் கூறியது. அடைக்கலம் புகும் எண்ணத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த உடன்பாடு காணப் பட்டது.

கிரீஸ் தீவுப் பகுதியில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள குடியேறிகளும் அகதிகளும் தங்களை துருக்கிக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கூக்குரல் எழுப்புகின்றனர். ஐரோப்பிய நாடுகளை நாடிச் செல்லும் அகதிகள் மற்றும் குடியேறிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!