மிட்வேலி கடைத்தொகுதியில் வெடிப்பு: 8 பேர் காயம்

கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று காலை 9.45 மணியளவில் மிட்வேலி கடைத்தொகுதியில் எரிவாயு தோம்பு வெடித்ததில் 8 பேர் காயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அந்த சம்பவம் தொடர்பில் அந்தப் பேரங்காடி வருத்தம் தெரிவித்துள்ளது. எல்பிஜி எனப்படும் திரவமய பெட்ரோலிய வாயுவை நிரப்பும் பணியின்போது, அதன் இரு உணவகங்களில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக பத்திரிகைக்கு விடுத்த அறிக்கையில் மிட்வேலி பேரங்காடி தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பில் உணவக ஊழியர்கள் எல்பிஜி பணியளர் கள் ஆகியோர் காயம் அடைந்த தாகவும் அவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மிட்வேலி கடைத்தொகுதி தெரிவித்தது.

இந்த வெடிப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் நிர்வாகிகள் கூறினர். மேலும் விபத்துகள் நடக்காமல் இருக்க, அந்த கடைத் தொகுதியில் உள்ள உள்ள உணவகங்களின் எரிவாயு பயன்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பேரங்காடிக்குள் அனுமதிக்கப் படுவதாகவும் மிட்வேலி பேரங்காடி தெரிவித்தது. மேலும் அவர்களின் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருக் கிறது. "எங்களின் வாடிக்கை யாளர்கள் மற்றும் வருகையாளர் களின் பாதுகாப்பே முக்கிய மானது. நடந்த சம்பவத்திற்காக நாங்கள் வருந்துகிறோம்," என்று மிட்வெலி பேரங்காடியின் அறிக்கை கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!