1எம்டிபி இயக்குநர் குழு கூண்டோடு பதவி விலகல்

கோலா­லம்­பூர்: மலேசிய நாடா­ளு­மன்றத்­தின் ஆளும்­கட்சி, எதிர்க்­கட்சி ஆகி­ய­வற்­றின் பிர­தி­நி­தி­களைக் கொண்ட பொதுக் கணக்­குக் குழு, மலே­சி­யா­வின் நிதி முத­லீட்­டுப் பிரச்­சினை­களுக்கு 1எம்­டி­பியை நிறுவிய தலைமை நிர்வாகி மீது குற்றம் சுமத்­தி­யுள்­ளது. இந்தப் பிரச்­சினை­க­ளால் நாட்டுச் சந்தை­களின் மீதான நம்­பிக்கை வீழ்ச்­சி­யுற்­ற­து­டன் மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக்கை பதவி வில­கு­மா­றும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது. அர­சாங்கத்­தின் நிதி நடை­முறை­களை மறுஆய்வு செய்யும் குழு 100 பக்­கங்களுக்­கான அறிக்கையை நேற்று சமர்ப்­பித்­தது. அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்ட சில மணி நேரங்களுக்­குப் பிறகு 1எம்­டி­பி­யின் இயக்­கு­நர்­கள் அனை­வ­ரும் தங்க­ளது பதவி விலகலை நிதி அமைச்­சி­டம் சமர்ப்­பித்­து­விட்­ட­தா­கக் கூறினர்.

இது மிகவும் கடி­ன­மான முடிவாக இருந்தா­லும் மேற்­கொண்டு விசாரணை செய்­வ­தில் ஏதும் இடையூறு இல்­லா­மல் இருப்­ப­தற்­காக பொதுக் கணக்­குக் குழுவின் பரிந்­துரைப்­படி இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக 1எம்­டி­பி­யின் அறிக்கை தெரி­வித்­தது. பொதுக் கணக்­குக் குழு, "முன்னாள் 1எம்டிபி தலைமை நிர்வாக அதிகாரி ஷஹ்ரோல் அஸ்ரல் இப்­ரா­ஹிம் ஹல்­மி­தான் 1எம்டிபி தொடர்­பான பல­வீ­னங் களுக்­கும் பிரச்­சினை­களுக்­கும் பொறுப்­பேற்க வேண்டும். வேறு யாருக்­கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஷஹ்ரோல் அஸ்­ர­லி­டம் அ­ம­லாக்க அமைப்­பு­கள் விசாரணை நடத்த வேண்டும்," என்று அதன்­ அறிக்கை­யில் குறிப்­பிட்­டி­ருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!