தைனானில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்த வழக்கு; ஐவர் மீது குற்றச்சாட்டு

தைப்பே: தைவானின் தைனான் நகரில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இடிந்து நொறுங்கியதன் தொடர்பில் ஐந்து பேர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விபத்தில் 115 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கட்டடத்தைக் கட்டிய கட்டுமான நிறுவனத்தின் முதலாளி லின் மிங் ஹுய், வடிவமைப்பு மேலாளர், கட்டடப் பொறியாளர்கள் இருவர், கட்டமைப்பு தொழில்நுட்பர் ஆகிய ஐவர் மீதும் கவனக் குறைவினால் உயிரிழப்பு, காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கட்டடக் கட்டுமானச் செலவைக் குறைக்கவும் வீட்டுப் பயன்பாட்டுக்கான இடத்தை அதிகரிக்கவுமான நோக்கில் கட்டுமானத்தில் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் கூறப்பட்டது. படம்: ஏஎப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!