துருக்கிக்கு அனுப்பப்படும் குடியேறிகள்

ஏதென்ஸ்: கிரீஸிலிருந்து குடியேறிகளை துருக்கிக்கு அனுப்பும் நடவடிக்கையை கிரீஸ் அதிகாரிகள் மீண்டும் தொடங்கி யுள்ளனர். முதல் கட்டமாக சில நாட்களுக்கு முன்பு குடியேறி களை ஏற்றிக்கொண்டு சில படகுகள் துருக்கிக்கு புறப் பட்டன. இரண்டாவது கட்டமாக குடியேறிகள் 140 பேரை ஏற்றிக்கொண்டு இரண்டு படகுகள் நேற்று லெஸ்பாஸ் தீவிலிருந்து துருக்கி நாட்டுக்கு புறப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். பாகிஸ்தானைச் சேர்ந்த 45 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு படகு புறப்படவிருந்த நேரத்தில் படகு செல்வதைத் தடுப்பதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடியேறிகளில் மூவர் கடலுக்குள் குதித்ததாகவும் அந்த மூவரையும் பின்னர் கடலோரக் காவல் படையினர் காப்பாற்றியதாகவும் தகவல்கள் கூறின. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் துருக்கியுடன் கண்டுள்ள உடன்பாட்டின்கீழ் குடியேறிகள் கிரீஸிலிருந்து துருக்கிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

கிரீஸ் எல்லைப் பகுதியில் ஒரு கிராமத்தில் தற்காலிக முகாம்களில் உள்ள அகதிகளும் குடியேறிகளும் எல்லையைத் திறந்துவிடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது போலிசாருடன் மோதுகின்றனர். படம்: ஏஎஃப்பி 2016-04-09 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!