நஜிப்: நாடாளுமன்றக் குழு அறிக்கை உண்மையல்ல

கோலாலம்பூர்: 1எம்டிபி நிறுவன நிதி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை உண்மையல்ல என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1எம்டிபியின் நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்ததை ஒப்புக்கொண்ட திரு நஜிப், பொது கணக்குக் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் ஆராயும் என்று கூறினார்.

"பாடங்கள் கற்றுக் கொண்டதை நாங்கள் அவசியம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். யாரேனும் தவறு செய்திருப்பதற்கான ஆதாரம் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்று திரு நஜிப் கூறினார். எம்டிபியின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ஷாரோல் அஸ்ரால் இப்ராகிம் ஹல்மியும் நிர்வாகத்தில் இருந்த மற்றவர்களும்தான் பொறுப்பு என்று பொது கணக்குக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

நீண்ட நாட்களாக எதிர் பார்க்கப்பட்ட 1எம்டிபி மீதான பொது கணக்குக் குழு அறிக்கை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில் சட்ட அமலாக்கத் தரப்பு ஷாரோல் மீதும் மற்ற நிர்வாகிகள்மீதும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம் என குழுவின் அறிக்கை கூறிற்று.2016-04-09 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!