பாரிஸ், பிரசல்ஸ் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய சந்தேகப் பேர்வழி கைது

பாரிஸ், பிர­சல்ஸ் பயங்க­ர­வாத தாக்­கு­தல்­களில் தொடர்­புடை­ய வன் என்று நம்பப்­படும் முகமட் அப்ரினி உட்பட ஐவரை பெல்­ஜி­ய போலிசார் கைது செய்­துள்­ளது. பாரிஸில் கடந்த நவம்பர் மாதம் 130 பேரைப் பலி­வாங்­கிய தாக்­கு­தல் தொடர்­பில் அந்த 31 வயதான பெல்ஜிய நாட்­ட­வர் தேடப்­பட்டு வந்தார். மார்ச் 22ஆம் தேதி பிர­சல்ஸ் விமான நிலை­யத்­தில் தாக்­கு­தல் நடத்­திய மூன்றா­வது குண்­டு­தாரி எனக் கூறப்­படும் 'தொப்பி அணிந்த மனிதர்' முகமட் அப்­ரி­னி­யாக இருக்­க­லாம் எனக் கரு­தப்­படு­கிறது. பெரும்பா­லும் மூன்றா­வது ஆள் முகமட் அப்­ரி­னி­யா­கத்­தான் இருக்­கும் என பெல்ஜிய ஊடகச் செய்­தி­கள் கூறு­கின்றன.

பெல்­ஜி­யத்தை சேர்ந்தவர் களால் பாரிஸ், பிர­சல்சில் நடந்த தாக்­கு­தல்­களைத் தடுக்கத் தவறி யதாக கடுமை­யான விமர்­ச­னத்துக்கு உள்­ளா­கி­யி­ருந்த பெல்ஜிய பாது­காப்­புத் துறை­யி­ன­ருக்கு இந்தக் கைது ஒரு பெரிய வெற்­றி­யா­கக் கரு­தப்­படு­கிறது. முன்னதாகத் தற்­கொலையாளி களில் ஒரு­வரைக் கைது செய்யத் தவ­றி­ய­தால், பதவி விலக முன் வந்த உள்துறை அமைச்­சர் ஜான் ஜாம்போன், கைது நட­வ­டிக்கை­யில் ஈடு­பட்­டோரை டுவிட்­ட­ரில் பாராட்­டி­யுள்­ளார்.

எனினும் தேசிய பாது­காப்பு எச்­ச­ரிக்கை நிலையில் எந்த மாற்­ற­மும் இல்லை என்று தெரி­வித்த அவர், "பயங்க­ர­வாதத்­துக்கு எதிரான போராட்­டம் தொடரும்," என்றார். பாரிஸ் தாக்­கு­தல் நடத்­தப்­படு­வதற்கு இரு நாட்­களுக்கு முன்னர், அத்­தாக்­கு­த­லில் முக்கிய சந்­தே­க­ந­ப­ரான சாலே அப­டே­ச­லா­மு­டன் அப்ரனி பாரிஸை நோக்கி காரில் சென்­றுள்­ளார். அந்த கார் இரு­நாட்­கள் கழித்து தற்­கொலைத் தாக்­கு­த­லுக்­குப் பயன்­படுத்­தப்­பட்­டது. அப­டே­ச­லாம் கைது செய்­யப்­பட்ட நான்கு நாட்­களுக்­குப் பிறகு, சகோ­த­ரர்­கள் பிராஹிம், காலிட் அல் பக்குரியி இரு­வ­ரும் உள்­ளூர்­கா­ர­ரான நஜிம் லாகரோய் ஆகியோர் பிர­சல்­சல் விமான நிலை­யத்­தி­லும் மெட்ரோ ரயில் நிலை­யத்­தி­லும் நடத்­திய தாக்­கு­த­லில் 32 பேர் இறந்த­னர்.2016-04-10 06:00:00 +0800

பிரசல்ஸ் அருகேயுள்ள ஆண்டர்லெக்ட் எனும் இடத்தில் முகமட் அப்ரனியை பெல்ஜிய நாட்டு போலிசார் வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர். அங்கு நடைபெற்ற அதிரடி சோதனையின்போது சந்தேகத்துக்கு உரியவரை போலிசார் கைது செய்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!