பனாமா நிறுவன எல் சல்வடோர் அலுவலகங்களில் சோதனை

சான் சல்வடோர்: பானாமா நாட்டில் உள்ள மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் மில்லியன் கணக் கான ரகசிய ஆவணங்கள் கசிந்ததைத் தொடர்ந்து வெளிநாடு களில் உள்ள அந்நிறுவன அலுவலங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் எல் சல்வடோர் அதிகாரிகள் அங்குள்ள மொசாக் பொன்சேகா நிறுவன அலுவலகங்களை சோதனை செய்தனர். அந்த அலுவலகங் களிலிருந்து சில ஆவணங்களும் சாதனங்களும் கைப்பற்றப்பட்டதாக அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித் தது. பனாமா ஆவணங்கள் கசிந் ததைத் தொடர்ந்து பல செல்வந்தர் கள் மற்றும் பிரபலங்கள் வெளிநாடுகளில் பணத்தை பதுக்கியுள்ள ரகசியம் அம்பலமாகி யுள்ளது.

ரஷ்யாவிலிருந்து சீனா வரை மற்றும் பிரிட்டனிலிருந்து ஐஸ்லாந்து வரை பல நாடுகளில் உள்ள செல்வந்தர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற் றுள்ளனர். ஆனால் அந்தப் பட்டியலில் ஒரு சில அமெரிக்கர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன. அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் பெயர்கள் அதில் இல்லாதது பலருக்கு வியப்பைக் கொடுத்துள்ளது.

எல் சல்வடோரில் உள்ள மொசாக் பொன்சேகா அலுவலகங்களை உள்ளூர் அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் அந்நாட்டு அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி டக்லஸ் மெலிண்டஸ் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார். பனாமா ஆவணங்கள் கசிந்ததைத் தொடர்ந்து பல செல்வந்தர்கள் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் பணம் பதுக்கியிருக்கும் ரகசியம் அம்பலமானதால் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் புள்ளிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பெயர்களும் அதில் இடம் பெற்றுள்ளன. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!