பாதுகாப்பு பிரச்சினை பற்றி ஹிரோ‌ஷிமாவில் விவாதம்

தோக்கியோ: ஜப்பானின் ஹிரோ ‌ஷிமா நகரில் ஒன்றுகூடியுள்ள ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், முக்கியமாக தென் சீனக் கடல் பகுதி விவகாரம், வட்டார பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, தென்சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு உரிமை கொண் டாடும் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து மற்ற அமைச்சர்களுடன் முக்கியமாக பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது.

1945ஆம் ஆண்டு அமெரிக் காவின் அணுகுண்டு தாக்கு தலுக்குப் பின்னர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஒருவர் ஹிரோ‌ஷிமா வந்திருப்பது இதுவே முதல் தடவை. ஜி7 நாடுகளின் உச்சநிலைக் கூட்டம் ஜப்பானில் மே 26-27 ஆகிய இரு நாட்களில் நடை பெறவுள்ள நிலையில் ஹிரோ‌ஷி மாவில் இந்த இரண்டு நாள் கூட்டம் நடைபெறுகிறது. ஜி7 உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஜப்பான் வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிரோ‌ஷிமாவுக்கு வருகையளிப் பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா ஆசியாவில் அதன் பங்காளித்துவ நாடுகளின் பேராளர்களை சந்திக்கும்போது வட்டார பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அவசியம் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் மார்க் டோனர் வெள்ளிக்கிழமை வா‌ஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்த வட்டாரத்தின் பாதுகாப்பிற்கு எது முக்கியம் என்பது குறித்து ஹிரோ‌ஷிமா கூட்டத்தில் அமைச்சர்கள் விவாதிப்பது முக்கியம் என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!