பிலிப்பீன்ஸ் போராளிகளுடன் ராணுவத்தினர்

கடும் மோதல்: 18 வீரர்கள் பலி மணிலா: பிலிப்பீன்சில் ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய அபுசயேப் குழு வினருக்கும் ராணுவத்தினருக் கும் இடையே சனிக்கிழமை நடந்த கடும் சண்டையில் ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்ததாக ராணுவம் தெரி வித்தது. அந்தச் சண்டையில் மேலும் 50 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். போராளிகள் தரப்பில் ஐந்து பேர் கொல்லப் பட்டதாக ராணுவம் கூறியது.

வெளிநாட்டினர் சிலரைக் கடத்திச் சென்றுள்ள அபுசயேப் குழுவினர் ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் தாங்கள் கேட்ட பிணைப்பணம் தங்கள் கைக்கு வராவிட்டால் பிணையாளிகளில் சிலரைக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்திருந்த நிலையில் அக்குழுவினருக்கும் ராணுவத் தினருக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டது.

பத்து மணி நேரம் நீடித்த சண்டையின்போது நான்கு வீரர்களை அபுசயேப் போராளிகள் படுகொலை செய்ததாக ராணுவப் பேச்சாளர் கூறினார். அபசயேப் தளபதி யைக் குறிவைத்து பிலிப் பீன்ஸ் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் இந்த கடும் சண்டை நடந்துள்ளது. அபுசயேப் குழுவின் தளபதி இஸ்னிலான் ஹெபிலானைப் பிடிப்பதற்கு ஏதுவாகத் தகவல் தருவோருக்கு 5 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.2016-04-11 06:00:00 +0800

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சரும் ராணுவத் தலைவரும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!