ஹிரோ‌ஷிமா நினைவிடத்திற்கு ஜான் கெர்ரி வருகை

தோக்கியோ: ஜப்பானின் ஹிரோ‌ஷிமா நகரில் நடந்த ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத் தில் கலந்துகொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று அங்குள்ள போர்க்கால வீரர்களின் நினை விடத்திற்குச் சென்றிருந்தார். அவருடன் மற்ற ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர் களும் அங்கு சென்றிருந்தனர்.

71 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோ‌ஷிமா நகர் மீது அமெரிக்க அணுகுண்டு வீசியபோது 140,000 பேர் கொல்லப்பட்டனர். அந்தப் போரில் உயிர் நீத்த ஜப்பானிய வீரர்களுக்காக அமைக் கப்பட்டுள்ள நினைவிடத்திற்கு சென்றிருந்த ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட அனைவரும் இந்த நினைவிடத்திற்கு அவசியம் வருகையளிக்க வேண்டும் என்று திரு கெர்ரி கேட்டுக்கொண்டார்.

உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலுக்கு இலக்கான ஹிரோ‌ஷிமா நகரில் உள்ள நினைவுப் பூங்காவுக்கு சென்ற ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!