மகாதீருக்கு எதிராக நான்கு விசாரணைகள்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீருக்கு எதிராக நான்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறியுள்ளார். மகாதீருக்கு எதிராக ஏற்கெனவே நான்கு விசாரணை ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அவற்றுள் சில இன்னும் முழுமை பெறவில்லை என்றும் திரு காலிட் கூறியதாக மலேசிய இணையப்பக்கத் தகவல் கூறியது. சில விசாரணை அறிக்கைகள் குறித்து அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரியுடன் விவாதித்து வருவதாக திரு காலிட் நேற்று காலை புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இவற்றில் சில தேச நிந்தனை சம்பந்தப்பட்டவை. மற்றும் சில, வேறு அம்சங்களில் ஆராயப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் சொன்னார். அதேவேளையில் பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து நீக்க வெளிநாடுகளின் தலையீடு தேவை என்று ஆகக் கடைசியாக மகாதீர் கோரியிருப்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா? என்பது குறித்து காலிட் உறுதிப் படுத்தவில்லை. முன்னதாக திரு மகாதீர் ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திரு நஜிப்பை பதவியிலிருந்து நீக்க அன்னிய நாடுகளின் தலையீடு தேவை என்று கூறிய தாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அவரது அக்கூற்றுக்குப் பல்வேறு தரப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மலேசிய ஆட்சி நிர்வாகத்திற்குள் அன்னியத் தலையீட்டைக் கொண்டுவர முயற்சிப்பதற்காக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் மகாதீர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அம்னோ மூத்த தலைவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திரு மகாதீர் அவ்வாறு கூறியிருப்பது மக்கள் அவர் மீது கொண்டுள்ள மரியாதையை இழக்கச் செய்யும் என்று மலேசிய துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். திரு மகாதீர் 1981ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தபோது மலேசியாவைப் பாதிக்கும் அல்லது மலேசியாவின் பெயரைக் கெடுக்க விரும்பும் அன்னிய நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று அரசாங்க அதிகாரிகளுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் அடிக்கடி நினைவுபடுத்தி வந்ததை திரு சாஹிட் தற்போது சுட்டிக் காட்டினார். இந்நிலையில் திரு மகாதீர், மலேசிய பிரதமர் நஜிப்பை பதவி யிலிருந்து நீக்க வெளிநாடுகளின் தலையீடு தேவை என்று தான் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது திரு மகாதீர் இவ்வாறு கூறினார்,

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!