அமெரிக்கத் தாக்குதலில் 25,000 போராளிகள் பலி

வா‌ஷிங்டன்: ஈராக்கிலும் சிரியா விலும் அமெரிக்கப் படையினர் மேற்கொ-ண்ட விமானத் தாக்குதல்களில் ஐஎஸ் போராளிகள் 25,000 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் கைப்பற்றிய நிலப்பகுதியில் 40 விழுக்காட்டினை ஈராக்கிய மற்றும் குர்தியப் படையினர் திரும்பக் கைப்பற்றியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

அதே போல சிரியாவில் ஐஎஸ் போராளிகள் கைப்பற்றிய பல பகுதிகளை மேற்கத்திய நாடு களின் ஆதரவைப் பெற்ற சிரியா படையினர் திரும்பவும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால் இஸ்தான்புல், பிரசல்ஸ், வட ஆப்பிரிக்கா. ஆப்கானிஸ்தான் ஆகிய இடங் களில் இந்த ஆண்டு நடந்த தாக்குதல்கள் ஒரு பயங்கரவாதக் குழு வலுவடைந்து வருவதை உணர்த்துகின்றன. இதனால் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற் றம் கண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகளும் ராணுவத் துறை நிபுணர்களும் முன்னுரைப்பதில் எச்சரிக்கையாக உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!