இந்தோனீசிய சிப்பந்திகள் நால்வர் போராளிகளால் கடத்தல்

மணிலா: பிலிப்பீன்ஸ் கடல் பகுதியில் இழுவைப் படகில் சென்றுகொண்டிருந்த நான்கு இந்தோனீசிய சிப்பந்திகளை ஆயுதம் ஏந்திய போராளிகள் கடத்திச் சென்றதாக பிலிப்பீன்ஸ் ராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறினார். படகு சிப்பந்திகள் தற்போது கடத்தப்பட்டிருப்பது ஒரு மாதத்தில் நடந்துள்ள மூன்றாவது சம்பவம் ஆகும். மலேசிய கடல் பகுதிக்கும் பிலிப்பீன்ஸ் கடல் பகுதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இந் தோனீசியாவின் இரு படகுகளை, ஒரு துரிதப் படகில் வந்த ஏழு துப்பாக்கிக்காரர்கள் வழிமறித்து அப்படகுகளில் இருந்த சிப்பந்தி களில் நால்வரை கடத்திச் சென்றதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

மலேசியாவின் சாபா கிழக்கு கடலோரப் பகுதியில் கடத்தல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காயமுற்ற இந்தோனீசிய சிப்பந்தி ஒருவரை மலேசிய கடல் துறை அமலாக்கப் படையினர் காப்பாற்றுகின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!