இக்வடோரில் நிலநடுக்கம்: குறைந்தது 77 பேர் பலி

குவிட்டோ: தென் அமெ­ரிக்­கா­வின் வடக்­குக் கடற்­கரை­யோர நாடான இக்­வ­டோ­ரில் நேற்று 7.8 ரிக்டர் அளவில் கடுமை­யான நில­ந­டுக்­கம் தாக்­கி­யுள்­ளது என்று அமெ­ரிக்க புவி­யி­யல் ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது. அந்த நில­ந­டுக்­கத்­தில் பல வீடுகள் இடிந்து நாச­மடைந்த நிலையில், குறைந்தது 44 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர் என்றும் கட­லோ­ரப்­ப­கு­தி­களுக்கு பசிஃபிக் பெருங்க­டல் சுனாமி எச்­ச­ரிக்கை மையம் விடுத்­துள்­ளது.

தலை­ந­கர் குவிட்­டோ­வில் இருந்து 173 கிலோ­மீட்­டர் வட­மேற்கே பூமியின் அடியில் சுமார் இருபது கிலோ­மீட்­டர் ஆழத்­தில் முதலில் ஒரு மிதமான நில­ந­டுக்­க­மும் அதற்­க­டுத்த சில நிமி­டங் களில் சக்­தி­வாய்ந்த மற்றொரு நில­ந­டுக்­க­மும் ஏற்பட்டன. முதலில் ஏற்­பட்ட நில­ந­டுக்­கம் 4.8 ரிக்­ட­ரா­க­வும், இரண்டா­வ­தாக ஏற்­பட்ட நில­ந­டுக்­கம் 7.8 ரிக்­ட­ரா­க­வும் பதி­வா­கி­ உள்­ளது. இவ்விரு நில­ ந­டுக்­கங்க­ளால் குவிட்டோ நகரில் உள்ள வீடு, கட்­டி­டங்கள் குலுங்­கின. பீதியடைந்த மக்கள் வீடு ­களை­விட்டு ஓடி­வந்து வீதி­களில் தஞ்சம் அடைந்த­னர்.

பசிஃபிக் கடற்கரையோர நகரான மன்ட்டாவில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்ட இடிபாடுகளை பொதுமக்கள் குழப்பத்துடன் காண்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!