பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் ராணுவ விமானம் ஒன்று முதல் முறையாக நேற்று தரை இறங் கியது. சீனாவின் ஊடகத் தகவல்கள் இதனைத் தெரி வித்தன. தென் சீனக் கடல் பகுதியில் சீனா கட்டியுள்ள புதிய விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்கியது. சீனாவின் இந்தச் செயல், எதிர்காலத்தில் போர் ஏதேனும் மூண்டால் அப்பகுதியில் சீனா அதன் போர் விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடும் என்று ராணுவ நிபுணர் ஒருவர் கூறுவதாக குளோபல் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் சீனா செயற்கைத் தீவுகளை உருவாக் கியதைக் குறை கூறி வரும் அமெரிக்கா, ராணுவ நோக் கங்களுக்கு அந்தச் செயற்கைத் தீவுகளைப் பயன் படுத்திக் கொள்ள சீனா திட்டமிட்டிருப்பது குறித்த அதன் கவலையை வெளிப்படுத்தி உள்ளது. சீனா உருவாக்கிய செயற்கைத் தீவுப் பகுதியில் சீனா கட்டி வரும் மூன்று விமான நிலையங்களில் ஒன்றான பியரி கிராஸ் ரீஃப் விமான நிலையத்தில் ராணுவ விமானம் முதல் முறையாக தரை இறங்கியிருப்பதை அந்நாட்டு ராணுவம் முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது