நஜிப்பின் சொத்துகளை முடக்க நீதிமன்ற உத்தரவை நாடும் மகாதீர்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் 2.6 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளை முடக்குவது தொடர்பில் நீதிமன்ற உத்தரவைப் பெற மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மனு தாக்கல் செய்திருப்பதாக திரு மகாதீரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். திரு நஜிப்பின் பெயரில் உள்ள சொத்துகள் மற்றும் அவருக்காக மற்றவர்களின் பெயர்களில் வைக்கப்பட்டுள்ள சொத்துகள் பற்றிய விவரங்களை பிரதமர் வெளிப்படையாக தெரிவிப்பதற்கான நீதிமன்ற உத்தரவை திரு மகாதீர் நாடியுள்ளதாகவும் அந்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். திரு நஜிப் ரசாக்கின் சொத்துகள், அவர் வங்கியில் வைத்திருக்கும் பணம் மற்றும் நிறுவனப் பங்குகள் ஆகியவற்றை முடக்க வேண்டும் என திரு மகாதீர் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!