காபூலில் தலிபான் தாக்குதல்: 30 பேர் மரணம், பலர் காயம்

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை நேற்று உலுக்கிய குண்டு வெடிப்பு தாக்கு தலில் பெண்கள், குழந்தைகள் உள்பட குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 320 பேர் காயமுற்றதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சுப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களில் பாதுகாப்புப் படை வீரர்களும் அடங்குவர். ஆப்கான் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து போராளிகள் நடத்திய தற் கொலைத் தாக்குதல் அது என்று ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

அத்தாக்குதலுக்கு தலிபான் போராளிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. அரசாங்க அலுவலகங்களுக்கு அருகே கார் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்ததாக தகவல்கள் கூறின. காபூலில் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே கார் குண்டு வெடித்ததாகவும் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கரும் புகை அப்பகுதியை சூழ்ந் திருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் கூறினர். காபூலில் நேற்று நடந்த அந்த பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஆப்கான் அதிபர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!