தென்கொரியாவில் ரயில் தடம் புரண்டது

சோல்: தென்கொரியாவில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதில் பொறியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 8 பேர் காயம் அடைந்ததாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறினர். தென்கொரியாவின் யோசு நகருக்கு அருகே அந்த ரயில் தடம் புரண்டதாகக் கூறப்பட்டது. ரயில் தண்டவாளத்தில் ஒரு பகுதியில் பழுதுபார்ப்புப் பணி நடந்து கொண்டிருந்தபோது அந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். த-ண்டவாளத்தின் வளையில் அந்த ரயில் சென்றபோது அது அதிவேகமாக வந்ததாக அப் பகுதியில் விபத்து நிகழ்ந்தபோது அவ்விடத்தில் இருந்த ரயில் அதிகாரிகள் கூறியதாக செய்தி நிறுவனத் தகவல் கூறியது. விபத்துக்கான காரணம் குறித்து போலிசார் எதுவும் தெரிவிக்க வில்லை.

விபத்து குறித்த புலன்விசாரணை நடை பெறுவதாக போக்குவரத்து அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த ரயிலில் மொத்தம் 27 பேர் இருந்ததாக அந்த அதிகாரி சொன்னார். விபத்தில் காயம் அடைந்தவர்கள் உடனடியாக அரு கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்ற 7 பேருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைத் தகவல் கள் கூறின,

தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்திற்கு கொண்டுவரும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!