சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் இந்தோனீசிய வங்கியாளர்

முன்னாள் இந்தோனீசிய வங்கி யாளரான ஹர்தவான் அலுவி (படம்) சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார். மேலும் அவரது நிரந்தரவாசத் தகுதி நிலை திரும்பப் பெறப்பட்டதாகவும் உள் துறை அமைச்சின் நேற்றைய அறிக்கை தெரிவிக்கிறது. "முதலீட்டுத் திட்டங்களில் மோசடி, பணமோசடி நடவடிக் கையில் ஈடுபட்டுள்ள ஹர்தவான் அலுவி விரும்பத்தகாத ஒருவர்," என உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறியதாக அமைச் சின் அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

குடி-நுழைவு ஆணையாளரின் முடிவை எதிர்த்து உள்துறை அமைச்சில் அவர் செய்த மேல் முறையீட்டை மிகுந்த கவனத்து டன் பரிசீலித்த அமைச்சர் அதை நிராகரித்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. எனவே, நேற்று முன்தினம் இந்தோனீசியாவிற்கு நாடு கடத் தப்பட்ட அவர், அந்நாட்டு போலி சாரால் கைது செய்யப்பட்டதாக 'ஜக்கார்த்தா போஸ்ட்' கூறியது. பணமோசடி தொடர்பாக 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவர் இந்தோனீசிய போலிசின் தேடப் படுவோர் பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!