யாசுகுனி நினைவிடத்திற்கு ஜப்பானிய அமைச்சர் வருகை

தோக்கியோ: தோக்கியோவில் உள்ள சர்ச்சைக்குரிய யாசுகுனி நினைவிடத்திற்கு ஜப்பானிய நீதித் துறை அமைச்சர் ஒருவர் நேற்று சென்றிருந்ததாக தகவல்கள் கூறின. இவருக்கு முன்னதாக மற்றொரு அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த நினைவிடத்திற்குச் சென்றிருந்தனர். இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்த ஜப்பானிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜப்பானியர்கள் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜப்பானிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாசுகுனி நினைவிடத்திற்குச் செல்வதற்கு தென்கொரியாவும் சீனாவும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் ஜப்பானிய அமைச்சர்கள் அங்கு செல்வதால் அவ்விரு நாடுகளும் சினம் அடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்கு சென்றிருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!