புகைமூட்டம் மோசமானால் பள்ளிகள் மூடப்படும்

கோலாலம்பூர்: மலேசியாவில் புகைமூட்டம் தொடர்ந்து மோச மானால் இங்குள்ள பள்ளிகள் அனைத்தும் ஒரு சில நாட்களுக்கு மூடப்படும் என்று கல்வி அமைச்சர் மஹட்சிர் காலிட் கூறியுள்ளார். காற்றின் தூய்மைக்கேடு அளவு 200 ஐ தாண்டுமானால் பள்ளிகள் மூடப்படும் என்று அவர் சொன் னார். மலேசியாவில் இந்த வாரத் தொடக்கத்தில் புகைமூட்டம் மோசமடைந்ததைத் தொடர்ந்து கல்வி அமைச்சு, நடவடிக்கை செயல்குழுவை அமைத்திருப் பதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

தேசிய சுற்றுப்புற வள அமைச்சர் வான் ஜூனைடி தலைமையிலான அமைச்சரவைக் குழு புகைமூட்டப் பாதிப்புக் குறித்த தகவல்களை அன்றாடம் தெரி விக்கவிருப்பதாகவும் அமைச்சர் சொன்னார். அத்தகவல் அடிப்படையில் பள்ளிகளை மூடுவது குறித்துத் தாங்கள் முடிவு எடுக்கவிருப்ப தாகவும் அவர் சொன்னார். மலேசியாவில் அனல்காற்று தாக்கி வரும் வேளையில் ஒரு சில இடங்களில் இப்போதே புகை மூட்டப் பாதிப்பு தொடங்கி விட்டது. சிலாங்கூரின் பல பகுதி களிலும் கோலாலம்பூரிலும் புகை மூட்டம் அதிகரித்துள்ளதாக தக வல்கள் கூறின.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!