ஒபாமாவை கைகுலுக்கி வரவேற்கும் குட்டி இளவரசர் ஜார்ஜ்

லண்டன்: பிரிட்டன் வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரிட்டனின் குட்டி இளவரசர் ஜார்ஜ் கைகுலுக்கி வரவேற்றது ஒபாமா தம்பதியருக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒபாமாவுடன் அவரது மனைவி மில் ஒபாமாவும் வந்திருந்தார். கென்சிங்டன் அரண்மனைக்குச் வந்திருந்த ஒபாமா தம்பதியரை வரவேற்பதற்காக குட்டி இளரவசர் ஜார்ஜ் தூங்காமல் விழித் திருந்ததாகக் கூறப்பட்டது. இரவு நேரத்தில் உடுத்தும் வெள்ளைநிற பைஜாமா உடை அணிந்திருந்த குட்டி இளவரசர் ஜார்ஜ், திரு ஒபாமாவை கைகுலுக்கி வரவேற்றது அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் இளவரசர் ஜார்ஜ் தனக்குப் பிடித்தமான ராக்கிங் குதிரையுடன் விளையாடச் சென்று விட்டார்.

இந்தப் படங்களைக் கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரு கின்றன. முன்னதாக திரு ஒபாமா, பிரிட்டிஷ் எலிசபெத் அரசியாரை சந்தித்துப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார். பிரிட் டனின் மகாராணியாக கடந்த 64 ஆண்டுகளாக இருந்துவரும் எலிசபெத் அரசி இரண்டு நாட்களுக்கு முன்பு தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

லண்டனில் கென்சிங்டன் அரண்மனைக்கு வந்திருந்த திரு ஒபாமாவையும் அமெரிக்கத் தலைமகள் மில் ஒபாமாவையும் பிரிட்டனின் குட்டி இளவரசர் ஜார்ஜ் வரவேற்கிறார். திரு ஒபாமாவை இளவரசர் ஜார்ஜ் கைகுலுக்கி வரவேற்றது அங்கிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அதே சமயம் ஒபாமாவும் அவர் மனைவி மிலும் குனிந்தபடி கீழே அமர்ந்து குட்டி இளவரசரை வரவேற்றனர். திரு ஒபாமாவுக்குப் பக்கத்தில் இளவரசர் வில்லியம். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!