காதோரம் கைபேசி வெடித்து காயம் அடைந்தவருக்கு சிகிச்சை

சுங்கை பட்டாணி: காது அருகே கைபேசி வெடித்ததால் காயம் அடைந்த 28 வயது ஊழியருக்கு மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை அதி காலை கைபேசியில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மின்னேற்றும் இணைப்புக் கம்பி கைபே சியுடன் இணைக்கப் பட்டிருந்தது. அதோடு அவர் பேசியபோது கைபேசி வெடித்தது. இதனால் அவரது முகத்தின் வலதுபக்கத்திலும் மார்பு, வலது கையிலும் தீக் காயங்கள் ஏற்பட்டன.

சம்பவத்தை உறுதி செய்த மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசான், "கைபேசி வெடித்த தில் அவரது கண் விழிப் படலமும் காது சவ்வும் பாதிக் கப்பட்டுள்ளன," என்றார். மேல் சிகிச்சைக்காக அவரை சிலாங்கூரின் சுங்கை புலோ மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் சொன் னார். இது, மலேசியாவில் மின் னேற்றிக் கொண்டிருந்தபோது கைபேசி வெடித்த இரண் டாவது சம்பவமாகும். கடந்த வாரம் நடைபெற்ற சம்பவத்தில் கைபேசிக்கு மின் னேற்றிக் கொண்டிருந்தபோது இணைப்புக் கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து போலிஸ் காரரின் மனைவி ஒருவர் கொல்லப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!