ஓராண்டுக்குப் பின் நிலநடுக்கத்தை விரக்தியுடன் நினைவுகூர்ந்த நேப்பாள மக்கள்

காட்மாண்டு: ஓராண்டுக்கு முன்பு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை நேப்பாள மக்கள் நேற்று விரக்தி யுடன் நினைவு கூர்ந்தனர். நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அதே சமயத்தில் அரசாங் கத்தை குறைகூறி பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் நிகழ்ந்ததில் ஏறக் குறைய 9,000 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் உயிர் தப்பிய நான்கு மில்லியன் பேர் இன்னமும் தற் காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர் என்று செஞ்சிலு வைச் சங்கம் போன்ற அனைத் துலக அமைப்புகள் கூறுகின்றன இதனால் கடமையிலிருந்து அரசாங்கம் தவறிவிட்டதாக மக்கள் சாடியிருக்கின்றனர். காட்மாண்டுவில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் ஷர்மா ஒலியும் பங்கேற்றார். பேரிடரில் இறந்தவர்களுக்கு மலர்க்கொத்துகளை வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார். பல நூறு பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒரு நிமிட மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது. மற்றொரு நிகழ்ச்சியில் நில நடுக்கத்தில் பாழடைந்த புகழ் பெற்ற கோயிலில் புத்த பிக்குகள் பிரார்த்தனைகள் செய்தனர்.

காட்மாண்டுவில் நில நடுக்கத்திற்குப் பிறகு கட்டடங்கள் இடிந்து கிடப்பதை மேல் படம் காட்டுகிறது. இதே இடத்தில் ஓராண்டுக்குப் பிறகும் கட்டி முடிக்கப்படாத கட்டடங்களை கீழ்ப் படம் காட்டுகிறது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!