‘கடல் பிரச்சினையால் ஆசியான் உறவு பாதிக்கக்கூடாது’

பெய்ஜிங்: தென் சீனக் கடல் பிரச்சினையால் சீனாவுக்கும் ஆசி யானுக்கும் இடையிலான நல்லுறவு பாதிக்கக்கூடாது என புருணை, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுடன் இணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சு நேற்று இதனை தெரிவித்தது. பத்து உறுப்பினர்கள் கொண்ட ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் பிலிப்பீன்ஸ், வியட்னாம், மலேசியா, புருணை ஆகிய நாடுகள் தென் சீனக் கடற்பரப்பில் உள்ள பகுதிகளுக்கு உரிமைக் கொண்டாடி வருகின்றன. ஆனால் தென்சீனக் கடற்பரப்பு முழுவதும் தமக்கே சொந்தம் என்று சீனா கூறுகிறது.

இந்த நிலையில் ஆசியான் அமைப்பில் உள்ள பல நாடுகளுக்கு சீனா ஆகப்பெரிய வர்த்தகப் பங் காளியாகவும் திகழ்கிறது. லாவோ தலைநகர் வியன் டியனில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, "புருணை, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுடன் சீனா முக்கிய கருத்திணக்கத்தை எட்டியுள்ளது," என்றார். "தென் சீனக் கடல் பிரச்சினை சீனா-ஆசியான் பிரச்சினையல்ல. இது, சீனா=ஆசியான் உறவு களைப் பாதிக்கக்கூடாது," என்று இணக்கம் காணப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு சுட்டிக் காட்டியது.

தென்சீனக் கடலில் சீனா உரிமை கோருவது ஆசியானின் சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் சீனாவுடன் வளர்ந்து வரும் பொருளியல் ஒத்துழைப்புக் கும் பரஸ்பர ஆதரவுக்கும் இடையே சமநிலையைக் கடைப் பிடிக்க ஆசியான் நாடுகள் போராடி வருகின்றன. கடந்த பிப்ரவரியில் சிங்கப்பூர், இந்தோனீசியா, தாய்லாந்து, மியன் மார் ஆகிய நாடுகளையும் உள்ள டக்கிய ஆசியான் அமைப்பு, தென் சீனக் கடற்பிரச்சினை தொடர்பில் அனைத்துலக அளவில் பதற்றம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தது. நில மீட்பு, கோபத்தைத் தூண்டும் நடவடிக்கைகள் பதற்றத் தை அதிகரித்ததோடு வட்டாரத் தின் அமைதி, பாதுகாப்பு, நிலைத் தன்மை ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கும் என்றும் கூறப் பட்டது.

செயற்கை தீவுகளை உரு வாக்கி பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் சீனாவை அண்மையில் அமெரிக்காவும் குறை கூறியது. மேலும் தென்சீனக் கடற் பரப்பில் சுதந்திரமான போக்குவரவு உரிமையை நிலைநாட்டும் வகை யில் சீனாவின் பிரச்சினைக்குரிய தீவுக்கு அருகே அமெரிக்க போர்க் கப்பல்களும் பயணம் செய்தன. தென் சீனக் கடற்பிரச்சினையை பொது மன்றங்களில் சீனா விவாதிப்பது இல்லை. ஆனால் உரிமைக் கொண்டாடும் பிலிப் பீன்ஸ் போன்ற நாடுகள் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பி வரு கின்றன. இதனால் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையே இப்பிரச்சினையில் கருத்து வேறு பாடு நிலவுகிறது.

லாவோசில் அந்நாட்டின் புதிய அதிபர் போன்ஹாங் வோராசிட்டை சந்தித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (இடம்). படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!