நான்காவது நாளாக ரிங்கிட் வீழ்ச்சி

கோலாலம்பூர்: அபுதாபி மன்னர் சொத்து நிதியின் ஒரு பகுதி முதலீட்டைக் கொண்ட மலேசியா வின் 1எம்டிபி நிறுவனத்தின் பங்குப் பத்திரங்களுக்கு வட்டி வழங்கப் படாததன் எதிரொலியாக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு நான்காவது நாளாகச் சரிந்தது என்றும் அது தவிர்க்க முடியாததா கும் என்றும் கூறப்படுகிறது. கோலாலம்பூரில் நேற்று காலை 9.45மணி நிலவரப்படி மலேசிய ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக 0.6 விழுக்காடு குறைந்து 3.932ஐ எட்டியது. சென்ற மாதம் 24ஆம் தேதிக்குப் பிறகு ரிங்கிட் சந்தித்த ஆகப் பெரிய வீழ்ச்சியாகும் இது. இம்மாதம் ரிங்கிட்டின் ஒட்டுமொத்த சரிவு 0.9 விழுக்காடு என்று கூறப்படுகிறது. சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 0.6 விழுக்காடு குறைந்து 2.9058ஐத் தொட்டது.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு 1எம்டிபி நிறுவனப் பங்குப் பத்திரங்கள் முதிர்ச்சி அடைந்து பணப்பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளது. அனைத் துலக பெட்ரோல் முதலீட்டு நிறுவனம் 1எம்டிபி நிறுவனத்தின் பங்குப் பத்திரங்களின் இணை முதலீட்டாளராக உள்ள நிலையில், அந்த நிறுவனத்துடனான சச்சரவினால் 1எம்டிபி நிறுவனம் 1.75 பில்லியன் டாலரில் 50 மில்லியன் டாலரைச் செலுத்தா மல் வைத்துள்ளது.

இதற்கிடையே, 1எம்டிபி நிதி விவகாரத்தில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தவறு செய்ததற்கான ஆதாரமோ அல்லது அதிகா ரத்தைத் தவறாகப் பயன்படுத்தி யதற்கான ஆதாரமோ இல்லை என்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் ஹசான் அரிஃபின் முன்னதாகக் கூறியிருந்தார். அதனால்தான் 1எம்டிபி விவகாரம் தொடர்பில் பொதுக் கணக்குக் குழு நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்த 106 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் நஜிப்பின் பெயர் இடம் பெற வில்லை என்றும் ஹசான் கூறி யிருந்தார். 1எம்டிபி யின் ஆலோசகராக மட்டுமே நஜிப் செயல்பட்டுள்ளார் என்றும் அந்த நிறுவனத்தினுள் நடந்த தவறான நிதி நிர்வாகத்திற்கு அவரைப் பொறுப்பேற்கும்படி கோர முடியாது என்றும் ஹசான் குறிப்பிட்டிருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!