மலேசியா: ‘ஏடிஎம்’ஐ தகர்த்து 300,000 ரிங்கிட் கொள்ளை

ஜிட்ரா: தானி­யங்கி வங்கி இயந்­தி­ரத்தை குண்டு வைத்துத் தகர்த்து விட்டு 300,000 ரிங்கிட் பணத் தைக் கொள்ளை­ய­டித்துக் கொண்டு இருவர் தப்­பி­யோ­டிய சம்பவம் ஜிட்ராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதி­காலை­யில் நடந்த அந்தச் சம்ப­வம் அங்­கி­ருந்த கண் காணிப்­புப் புகைப்­ப­டக் கரு­வி­யில் பதி­வா­கி­யி­ருந்தது. அதனைக் கண்ட குபாங் பாசு மாவட்ட போலிஸ் தலைமைக் கண்காணிப்பு அதிகாரி அப்துல் ரகிம் அப்­துல்லா, அந்தக் குற்றச் செயல் காலை 5.04மணிக்கு நடந்த­தாகவும் 'டொயோட்டா கேம்ரி' காரில் வந்த முக­மூ­டி­ய­ணிந்த இரண்டு ஆடவர் அதனைச் செய்­த­னர் என்றும் தெரி­வித்­தார்.

இரும்­புக் கம்பியை வைத்து நெம்பி இயந்திரத்தின் மேல், கீழ் பகுதிகளை அகட்டினர். அதன் பிறகு ஓரடி நீள குழாய் குண்டு வைத்து அந்த தானி­யங்கி வங்கி இயந்­தி­ரத்தை அவர்­கள் தகர்த்­த­தா­கத் தெரி கிறது. அரையடி நீள குழாய் குண்டுடன் சித­றிக்­கி­டந்த 600 ரிங்கிட் பணமும் சம்பவ இடத்­தி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டன என்று அப்துல் ரகிம் அப்­துல்லா செய்­தி­யா­ளர்­களி­டம் தெரி­வித்­ தார். தானி­யங்கி வங்கி இயந்­தி­ரத் தின் கண்­ணா­டிக் கூண்டும் குண்டு வெடித்­த­தில் உடைந்து சித­றி­யி­ருந்தது. இந்த சம்ப­வத்­தினால் உயிர் உடல் சேத­மில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. குண்டு வெடித்­தபோது மிக பயங்கர ஓசையை எழுப்­பி­யது என்று சம்பவ இடத்­தி­லி­ருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடையின் உரிமை­யா­ளரான 40 வய­தா­கும் தேவி என்ற பெண்மணி கூறினார்.

முகமூடி அணிந்து காரில் வந்த இருவர் குண்டு வைத்துத் தகர்த்ததால் சேதமான தானியங்கி வங்கி இயந்திரம். படம்: த ஸ்டார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!