சிரியா மருத்துவமனை மீது ஆகாயத் தாக்குதல்; மருத்துவர்கள் உட்பட பலர் பலி

அலெப்போ: சிரியாவின் அலெப் போ நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ஆகாயத் தாக்கு தலில் மூன்று மருத்துவர்கள் உட் பட குறைந்தது 14 பேர் கொல்லப் பட்டனர். மாண்டவர்களில் நகரத்தின் கடைசிக் குழந்தை நல மருத்துவர் ஒருவர் என்றும் எம்எஸ்எஃப் என்ற தொண்டூழிய அமைப்பு குறிப்பிட்டது. அரசு எதிர்ப்பாளர்களின் வச முள்ள பகுதிகள் மீது மேற் கொள்ளப்பட்ட பயங்கரத் தாக்கு தலை சிரியா அரசாங்கம் அல்லது ரஷ்ய போர் விமானங்கள் நடத்தி யிருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால் அதிகாரப்பூர்வ அறிக் கை எதுவும் நேற்று உடனடியாக வெளியிடப்படவில்லை. போர் நிறுத்தம் அமலில் இருந் தாலும் கடந்த சில நாட்களாக சிரியாவில் வன்முறைகள் அதி கரித்து வருகின்றன. இதற்கிடையே, சிரியாவில் மூச்- சுத் திணறிக் கொண்டிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையைக் காப்பாற்ற உயர்மட்ட அளவில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தலை யிட வேண்டும் என்று ஐநா தூதர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அலெப்போ நகர மக்கள் கட்டட இடிபாடுகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி வெளியே கொண்டு வருகின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!