மலேசியா: மனைவியிடமிருந்து குழந்தையைப் பறித்த கணவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

புத்ரா ஜெயா: நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்படாத ஒருவரை கைது செய்யும்படி மலேசியாவின் போலிஸ் தலைமைத் தளபதிக்கு அந்நாட்டின் கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகமது ரிதுவான் அப்துல்லா என்ற தமது முன்னாள் கணவர் நீதிமன்ற உத்தரவுப்படி தமது ஆறு வயது மகளை ஒப்படைக்க வில்லை என்று திருமதி இந்திரா காந்தி ஈப்போ உயர் நீதிமன்றத்தில் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி முன்னாள் கணவரை கைது செய்யும்படி உத்தரவிட்டது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்தார் முன்னாள் கணவர். இதில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல் செய்ய மறுத்தது மேல் முறையீட்டு நீதிமன்றம்.

இறுதியில் இந்திரா காந்தி கூட்டரசு நீதிமன்றத்தின் உதவியை நாடினார். இந்த வழக்கை விசாரித்த கூட்டரசு நீதிமன்றம் நேற்று தனது முடிவை அறிவித்தது. அதன்படி, ஐந்து நீதிபதிகளைக் கொண்ட கூட்டரசு நீதிமன்றம் திருமதி இந்திரா காந்தியின் முன் னாள் கணவரும் மதம் மாறியவரு மான திரு முகமது ரிதுவான் அப்துல்லாவுக்கு எதிரான கைது ஆணையை நிறைவேற்றும்படி போலிஸ் தலைமைத் தளபதி காலிட் அபு பக்கருக்கு உத்தர விட்டது. அத்துடன், அவரை அவரது ஆறு வயது மகளை முன்னாள் மனைவியான இந்திரா காந்தியிடம் ஒப்படைக்க வைக்குமாறும் நீதிபதி கள் ஆணை பிறப்பித்தனர்.

முன்னாள் கணவருக்கு எதிராக நீதிமன்ற உதவியை நாடிய இந்திரா காந்தி. படம்: தி ஸ்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!