சரவாக் தேர்தல்; 24,604 பேர் முன்கூட்டியே வாக்களிப்பு

கூச்சிங்: மலேசியாவின் ஆகப் பெரிய மாநிலமான சரவாக்கில் இம்மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் 24,604 வாக்காளர்கள் இன்று முன்கூட்டியே நடைபெறும் வாக் களிப்பில் வாக்களிப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது. போலிசார், ராணுவம், அவர் களுடைய குடும்பத்தினர் உள்ளிட் டவர்கள் இன்று வாக்களிப்பார்கள் என்று ஆணையத்தின் செயலாளர் அப்துல் கனி சாலே குறிப்பிட்டார். இன்று காலை 8.00 மணியி லிருந்து ஐந்து மணி வரையில் 79 வாக்குச் சாவடிகளில் அவர்கள் வாக்களிப்பர்.

சரவாக் மாநிலத்தின் பொது வாக்காளர்களின் எண்ணிக்கை 1,113,522. முன்கூட்டியே வாக்கு அளிப்பவர்கள் 24,604 பேர், அஞ் சல் வாக்காளர்கள் 106. மொத்த தொகுதிகள் 82. இதற்கிடையே, சரவாக்கில் உள்ள கிராமப்புறங்களை மேம் படுத்த தனது தந்தை துன் அப்துல் ரசாக்கின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாக பிரதமர் நஜிப் உறுதியளித்துள்ளார். தற்போதைய மாநிலத்தின் மேம்பாடு திருப்தியளிக்கும் விதத்தில் இல்லை என்றும் அவர் கூறினார்.