தீபகற்ப மலேசியாவில் குறைந்தபட்ச சம்பளம் உயர்கிறது

கோலாலம்பூர்: வரும் ஜூலை மாதத்திலிருந்து தீபகற்ப மலே சியாவில் உள்ள ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ஆயிரம் ரிங்கிட்டுக்கும் சாபா, சரவாக்கில் உள்ள ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளம் 920 ரிங்கிட்டுக்கும் உயர்த்தப்படுகின்றன. மே தின நிகழ்ச்சியில் ஊழியர் களிடம் உரையாற்றிய பிரதமர் நஜிப் ரசாக், தற்போதைய சூழ் நிலையில் ஊழியர்களுக்கும் முத லாளிகளுக்கும் உதவும் வகையில் காப்புறுதித் திட்டம் கொண்டு வருவது குறித்தும் பரிசீலிப்ப தாகக் கூறினார். “புதிய குறைந்தபட்ச சம்பளம் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. இது, தீபகற்ப மலே சியாவில் உள்ள ஊழியர்களுக்கு 100 ரிங்கிட்டும் சாபா, சரவாக், லபுவானில் உள்ள ஊழியர்களுக்கு 120 ரிங்கிட்டும் சம்பள உயர்வைத் தரும்,” என்று பிரதமர் நஜிப் குறிப் பிட்டார்.

புத்ரா வேர்ல்ட் வர்த்தக நிலை யத்தில் தேசிய அளவில் நடை பெற்ற மே தின நிகழ்ச்சியில் சுமார் 5,000 ஊழியர்கள் கலந்து கொண்டனர். “2013ஆம் ஆண்டில் நாடு முழுதும் அமலாக்கப்பட்ட குறைந்த பட்ச சம்பளத்தினால் தனியார் துறையில் உள்ள 1.9 மில்லியன் ஊழியர்கள் பயனடைந்தனர். இது, அண்மையில் அறிவிக்கப்பட்ட புதிய சம்பள முறையின் கீழ் பொதுத்துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது,” என்று பிரதமர் நஜிப் கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி