விசா இல்லாத பயணம்: துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியம் சலுகை

ஷெங்ஜன்: ஐரோப்பாவின் ஷென் ஜன் பகுதிக்கு துருக்கி நாட்டவர் விசா இல்லாமல் பயணம் செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை அளிக்கவுள்ளது. ஐரோப்பாவுக்கு குடியேறத் துடிப்பவர்கள் துருக்கியிலிருந்து ஏஜியன் கடலைத் தாண்டி கிரீஸ் வந்த வண்ணம் உள்ளனர். இதைத் தடுக்க அவ்வாறு வரும் குடியேறிகளை துருக்கி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அந் நாட்டவருக்கு விசா இல்லா பயணத்தை தான் வழங்க தயாராக உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அறிவித்துள்ளன.

எனினும், இதற்காக துருக்கி சில நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து இந்த சலு கையைப் பெற துருக்கி தனது நாட்டில் பேச்சுரிமை, அனைவருக் கும் நியாயம் கிடைக்கும் வகையில் நீதித்துறையைச் சீரமைப்பது, சிறு பான்மையினரைப் பாதுகாக்கும் வகையில் பயங்கரவாத சட்டங் களில் மாற்றம் செய்வது ஆகிய நிபந்தனைகளுக்கு துருக்கி இணங்க வேண்டும் என்று ஐரோப் பிய ஒன்றிய நாடுகள் கூறியுள்ளன.

கிரீஸ்=மசெடோனியா எல்லையில் இடோமெனி என்ற கிராமத்தில் உள்ள தற்காலிக முகாம் ஒன்றில் சிறுவன் நேற்று பந்து வைத்து விளையாடினான். ஐரோப்பாவின் ஷென்ஜன் பகுதிக்கு துருக்கி நாட்டவர் விசா இல்லாமல் பயணம் செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை அளிக்கவுள்ளது. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்