முட்டைகளை நெருங்கவிடாமல் தற்காத்த 100 கிலோ பாம்பு

சுமார் நான்கு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பேராக் மாநிலம் கம்போங் சுங்கை கெராங் செம்பனை எண்ணெய் பயிர்த்தோட்டத்தில் நேற்று பிடிபட்டது. கிட்டத்தட்ட 100 கிலோ எடையுள்ள இந்தப் பெண் பாம்பைப் பிடிக்க குடிமைத் தற்காப்புத் துறையினர் முயன்றபோது அது தனது கூட்டை உடலால் சுற்றி வளைத்துத் தற்காத்தது. செம்பனை மரம் ஒன்றின் அடியில் பொந்து ஒன்றில் கட்டப்பட்டு இருந்த கூட்டினுள் 90 பாம்பு முட்டைகள் இருந்தன. மலைப்பாம்பும் முட்டைகளும் பாடாங் தெராப்பில் உள்ள குடிமைத் தற்காப்புத் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. படம்: மலேசிய ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி