போட்டி நீங்கியது: ட்ரம்ப் உத்தேச அதிபர் வேட்பாளர்

வா‌ஷிங்டன்: குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் என்று கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. வேட்பாளர் நியமனத்தை அவர் பெறுவது உறுதியாகி வரு வதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. இண்டியானா மாநிலத்தில் டெட் குருஸ் தோல்வியைத் தழுவி யதன் காரணமாக ட்ரம்ப்புக்கு முன்னேற்றம் ஏற்பட்டது. இண்டி யானா தேர்தல் முடிவுக்குப் பின்னர் பேசிய டெட் குருஸ் தனக்கு வெற்றிப் பாதை தென்படவில்லை என்றார்.

வேட்பாளர் போட்டியிலிருந்து விலகும் கட்டாயத்திற்குத் தாம் வந்துவிட்டதாகவும் அவர் கூறி னார். “எல்லாம் நல்லதாகத் தெரிந்த வேளையில் வாக்காளர்கள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துவிட் டனர். எனவே நாட்டின் எதிர்கால நலன் கருதி நாங்கள் எங்களது பிரசாரத்தை நிறுத்திக்கொள் கிறோம் என்பதை கனத்த இதயத் துடன் அறிவிக்கிறேன்,” என்றார் குருஸ். இதற்கிடையே, வெற்றிப் பேரணி யில் உரை நிகழ்த்திய ட்ரம்ப், டெட் குருஸைப் பாராட்டிப் பேசி னார். ‘அவர் ஒரு புத்திசாலித்தன மான போட்டியாளர்,’ என்றார் ட்ரம்ப். தமது அடுத்த இலக்கு நவம்பரில் நடக்கவிருக்கும் அதி பர் தேர்தல்தான் என்றார் அவர்.

இண்டியானா மாநில வெற்றிக்குப் பின்னர் மான்ஹாட்டனில் உள்ள ட்ரம்ப் டவரில் ஒன்றுகூடிய ஆதரவாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்த ஆயத்தமாகிறார் ட்ரம்ப். அருகில் அவரது துணைவியார் மெலியானா ட்ரம்ப். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்