பாகிஸ்தானில் ‘ஓடிப்போக’ உதவிய தோழி கழுத்து நெரிபட்டு, எரித்துக் கொலை

பெஷாவர்: தோழி தன் காத­ல­ னு­டன் ஓடிப்­போக உதவி செய்த ஒரு பாகிஸ்­தானிப் பெண்ணை மருந்து உட்­கொள்­ளச் செய்து, கழுத்தை நெரித்து, எரித்­துக் கொலை­செய்­த­தாக 14 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். சுமார் 20 வயதான அந்தப் பெண்ணை கிராமத் தலை­வ­ரின் ஆணைப்­படி கடந்த மாதம் 29ஆம் தேதி வட­மேற்கு பாகிஸ்­தா­னில் உள்ள மகோல் கிரா­மத்­தில் சுஸுகி வேனில் வைத்து எரித்­துக் கொன்ற­தா­கச் சொல்­லப்­ படு­கிறது. கொல்­லப்­பட்ட பெண்ணின் தோழி காத­ல­ரு­டன் ஓடிச்­சென்ற போது அந்த வேனில் மறைந்­தி­ருந்த­தால் அந்த வேனோடு பெண் எரிக்­கப்­பட்­ட ­தா­கக் கூறப்­படு­கிறது. இந்தக் கொலையைச் செய்யத் தூண்டிய 13 கிரா­ம­வா­சி­களைக் கைது செய்­துள்­ள­தாக மாவட்ட போலிஸ் தலைவர் குர்ரம் ர‌ஷீது கூறி­யுள்­ளார்.

கிராமத் தலை­வர்­களின் செயலை, கொலை செய்­யப்­பட்ட பெண்ணின் தாயாரும் ஆத­ரித்­த­தால் அவரை­யும் போலிசார் கைது செய்­துள்­ள­னர். குடும்ப கௌர­வத்தைக் காப்­பாற்­றும் நோக்கில் பாகிஸ்­தா­னில் நூற்­றுக்­க­ணக்­கான பெண்கள் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளால் கௌரவக் கொலை செய்­யப் ­படு­கின்ற­னர். 2005ஆம் ஆண்டு இத்­தகைய கொலை­களைத் தடுக்­கும் நோக்கில் பாகிஸ்­தா­னின் குற்­ற­வி­யல் சட்­டத்­தில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டா­லும் கௌரவக் கொலைகள் தொடர்­கின்றன. பாகிஸ்­தா­ன் பிர­த­மர் நவாஸ் ஷெரீஃப், கௌரவக் கொலைகளை ஒழிக்க எண்ணம் கொண்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டா­லும் புதிய சட்­டங்கள் எதுவும் இயற்­றப்­ப­ட ­வில்லை. இந்த வழக்­கின் தொடர்­பில் கைது செய்­யப்­பட்ட 14 பேரும் பயங்க­ர­வாதத்­துக்கு எதிரான நீதி­மன்றத்­தில் முன்­னிலைப்­படுத்­தப் ­படு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!