தென்சீனக் கடல் பகுதியில் கொள்ளையை முறியடிக்க கூட்டு சுற்றுக்காவல் படை

ஜகார்த்தா: இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து தென்சீனக் கடல் பகுதியில் சுற்றுக்காவல் பணியை மேற்கொள்ளவிருக்கின்றன. கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்தக் காவல் பணி, கடல் பகுதியில் ஏற்படும் அவசரத் தேவைகளுக்கும் விரைந்து செயல்படமுடியும் என இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி நேற்றுத் தெரிவித்தார்.

மேலும் இந்தக் காவல் அமைப்புகளிடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கும் பொருட்டு நேரடி தொலைபேசி இணைப்புகளும் இருக்கும் என திருவாட்டி ரெட்னோ குறிப்பிட்டார். மலாக்கா ஸ்ட்ரெய்ட்ஸ் சுற்றுக்காவலின் ஓர் அங்கமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தெற்கு பிலிப்பீன்ஸ், வடக்கு மோனியோ ஆகிய பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த ஆட்கடத்தல் சம்பவங்களை அடுத்து இந்த மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் யோக்ஜகார்த்தாவில் சந்தித்துப் பேசியபோது இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்