சர்ச்சையைக் கிளப்பிய ‘இன்ஸ்டகிராம்’ படம்; பாலர்பள்ளிகளைக் கண்காணிக்கும் மலேசிய போலிசார்

மலேசியாவில் உள்ள பாலர்பள்ளிகள் மாணவர்களுக்கு போர்ப் பயிற்சி அளிக்கும் மையங்களாக இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் மலேசிய போலிசார் நாடு முழுவதுமுள்ள பாலர்பள்ளிகளைக் கண் காணித்து வருகின்றனர் என புக்கிட் அமான் சிறப்புப் பிரிவு இயக்குநர் ஃபுஸி ஹாருன் கூறியுள்ளார். பாலர் பள்ளியில் பயிலும் சிறாரும் ஆசிரியை ஒருவரும் கையில் பொம்மைத் துப்பாக்கிகளுடன் சீருடையில் காட்சியளிக்கும் சில புகைப்படங்கள் இணையத் தில் வெகுவாகப் பரவி சர்ச்சையைக் கிளப்பியுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோட்டா தாமான்சாரா பாலர்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் இந்தப் புகைப்படங்களை இன்ஸ்ட கிராமில் பதிவேற்றியிருந்தார். பாலர்பள்ளிப் பருவத்திலேயே இதுபோன்ற கலாசாரத்தைப் பரப்புவது -பற்றி இணையத் தில் பலரும் பலவிதமான கருத்துகளை வெளியிட் டிருந்தனர். படம்: _sitifathima/Instagram