வங்கிக் கணக்கிற்கு வந்த $4.6 மில்லியன்: ஆடம்பரச் செலவு செய்த மலேசிய மாணவி

சிட்னி: தமது வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணத்தை எடுத்துச் செலவு செய்து தீர்த்த மலேசிய மாணவி ஒருவர் மீது ஆஸ்திரேலியாவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரது பெயர் கிறிஸ்டின் ஜியாக்சின் லீ, 21, என ஊட கங்கள் குறிப்பிடுகின்றன. ஆஸ் திரேலியாவில் ரசாயனப் பொறி யியல் படித்து வரும் அவரது வங்கியின் சேமிப்புக் கணக்கிற்கு அளவற்ற கடன் தொகை வரவு வைக்கப்பட்டது. அதிர்ஷ்டம் தமக்கு வந்த தாகக் கருதிய மாணவி, உடனடியாக அந்தப் பணத்தை எடுத்து ஆடம்பரச் செலவுகளைச் செய்யத் தொடங்கினார்.

சொகுசான வாடகை வீட்டில் தங்கியதோடு விலை உயர்ந்த கைப்பைகள் உள்ளிட்ட மதிப்பு மிக்க பொருட்களை வாங்கிக் குவித்தார். இவ்வாறு 3.4 மில்லி யன் அமெரிக்க டாலர் (4.6 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) பணத்தைத் தம் மனம்போன போக்கில் செலவழித்து மகிழ்ந் தார் அவர். 2014 ஜூலை முதல் கடந்த ஆண்டு ஏப்ரல் வரையில் அவர் பெரிய அளவிலான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகக் கூறப் படுகிறது. வங்கி தனது தவற்றை உணர்ந்து பணத்தை மீட்க முயற்சித்தபோது அந்த மாணவி யின் வங்கிக் கணக்கில் பண மில்லை. வங்கி விழித்துக்கொண் டதை உணர்ந்த அவர், ஆஸ்தி ரேலியாவிலிருந்து மலேசியா வுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது கடந்த புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!