1 ரிங்கிட் விலை ஏற்றியதற்கு 4,000 ரிங்கிட் அபராதம்

ஷா அலாம்: நாஸி லிமா உணவின் விலையை ஒரே ஒரு ரிங்கிட் ஏற்றியதற்காக உணவகம் ஒன்றுக்கு 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுபாங் ஜெயாவில் உள்ள அந்த உணவகத்தில் நாஸி லிமாவின் விலை கடந்த ஆண்டு ஜனவரியில் 2.50 ரிங்கிட்டாக இருந்தது. ஜூன் மாதம் அந்த விலை 3.50 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது. இந்த திடீர் விலை ஏற்றம் குறித்து உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சைச் சேர்ந்த முகமது ஸரிஃப் அன்வார் முகமது அலி நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.

உணவக உரிமையாளரான டி. கோபிநாத், 36, விலையை ஏற்றியதற்கான சான்றுகளை நிரூபிக்கத் தவறினார். விலைக் கட்டுப்பாடு மற்றும் லாபம் ஈட்டலுக்கு எதிரான சட்டம் 2011ன் படி குற்றம் இழைக்கப்பட்டதாகக் கூறிய நீதிமன்றம், கோபிநாத் துக்கு 4,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. தங்களது விருப் பப்படி கடைக்காரர்கள் விலையை ஏற்ற சட்டப் பிரிவு 57(பி) தடுக்கிறது. இதனை மீறுவோருக்கு அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் அபராதம், ஈராண்டுச் சிறை ஆகியன விதிக்கப் படலாம்.