வடகொரியாவில் 36 ஆண்டுகளில் முதல் அரசியல் மாநாடு

பியோங்யாங்: வடகொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி மாநாடு 36 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தொடங்கியது. அதிபர் கிம் ஜோங்-உன்னின் தலைமைத்துவத்தை வலுப்படுத் தும் நோக்குடனும் கட்சியில் அவ ரது செல்வாக்கை உயர்த்தும் வண்ணமும் இம்மாநாடு நடத்தப் படுவதாக ஊடகங்கள் குறிப்பிடு கின்றன. இருப்பினும் இம்மாநாடு வடகொரியாவின் கொள்கைகளிலோ அரசியல் தலைமைத்துவத்திலோ மாற்றத்தை ஏற்படுத்துமா என்று உலகம் உற்றுநோக்கி வருகிறது. ஐந்தாவது அணு ஆயுதச் சோதனையை வடகொரியா நடத்த இருப்பதாகக் கணிக்கப்பட்டு வரும் வேளையில் அதிபர் கிம், தமது அணுவாயுத லட்சியத்தை மறுஉறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டுக்கு வெளிநாட்டு ஊடகங்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும் மாநாட்டு மண்டபத்துக் குள் அவை அனுமதிக்கப்பட வில்லை. -நாட்டின் வீதிகளை தொழி லாளர் கட்சியின் கொடிகளும் தோரணங்களும் அலங்கரிக்கின் றன. அதிபர் கிம்முக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பதாகைகளும் காணப் படுகின்றன. "எங்களது உயிரைக் கொடுத்தாவது கொரியத் தலைமையகத்தைக் காப்போம்," என்னும் வாசகங்கள் அந்தப் பதாகைகளில் எழுதப்பட்டுள்ள தாக பிபிசி தெரிவிக்கிறது.

அதிபர் கிம்மின் படத்தோடு அவரது தந்தை, தாத்தா ஆகியோரின் பெரிய உருவப் படங்கள் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளன. இது இக்கட்சியின் ஏழாவது மாநாடு. இதற்கு முந்திய மாநாடு 1980ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இப்போதைய அதிபர் கிம் அந்த ஆண்டில் பிறந்திருக்கக் கூட இல்லை. அவரது தலைமுறையில் நடத்தப்படும் முதல் மாநாடு என்பதால் நாடு முழுவதும் உள்ள கட்சியின் முக்கிய தலைவர்கள் தலைநகரில் ஒன்றுகூடி அதிபர் கிம்முக்கு ஆதரவு திரட்டும் பணியில் இறங்கியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!