சரவாக்: ஹெலிகாப்டர் சிதைவுகள், அமைச்சரின் உடல் மீட்பு

கூச்சிங்: சரவாக் மாநிலத்தில் காணாமற்போன ஹெலிகாப்டரின் பாகங்கள் என்று நம்பப்படும் சிதைவுகளை, தேடி மீட்கும் அதி காரிகள் கண்டுபிடித்து உள்ளதாக பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்து உள்ளார். ஹெலிகாப்டரின் முழுப் பகுதியையும் கண்டுபிடிக்கும் வரையில் தேடுதல் பணி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மலேசிய தோட்டத் தொழில், மூலப்பொருள் துணை அமைச்சர் நோரியா கஸ்னோன், 52, அவரது கணவர் மற்றும் நால்வர் அந்த ஹெலிகாப்டரில் சென்றனர். யூரோகாப்டர் AS350 என்னும் அந்த ஹெலிகாப்டர் பெத்தோங் கிலிருந்து மாலை 4.12 மணிக்கு கூச்சிங் நோக்கிக் கிளம்பிச் சென்றது.

கூச்சிங் சென்றுசேர 35 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால் திடீரென்று மாலை 4.32 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் ராடார் தொடர்பி லிருந்து விடுபட்டதாகத் தெரி விக்கப்பட்டது. உதவி கேட்டு ஹெலிகாப்டரிலிருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை என்று சரவாக் போலிஸ் ஆணையர் முகமது சப்து ஒஸ்மான் நேற்று முன்தினம் இரவு தெரிவித்தார். இதற்கிடையே, பத்தாங் லுபார் என்னும் இடத்தில் ஹெலிகாப்டர் வாலின் ஒரு பகுதியும் மிதவைக் கருவியின் பாகம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்