கனடா: மேலும் தீவிரமடையும் காட்டுத் தீ

ஒட்டாவா: கனடாவின் ஃபோர்ட் மெக்மரே நகரில் மூண்டுள்ள பெரும் காட்டுத் தீ இன்னும் மோசமடைந்துள்ளது. ஏற்கெனவே 1,010 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு தீயில் நாசமாகி விட்ட நிலையில் வறண்ட கால நிலையும் பலத்த காற்றும் தீ மேலும் பரவ துணை செய்கின்றன. தீயின் உக்கிரம் இப்போதுள்ளதைப் போல இருமடங்காகும் என எதிர் பார்க்கப்படுகிறது. "தென்மேற்குத் திசையிலிருந்து காட்டுப் பிரதேசமான வடகிழக்குப் பகுதியை நோக்கி காற்று வீசு கிறது. இதனால், நாளை இரவுக்குள் (நேற்று நள்ளிரவு) தீப்பற்றி எரியும் காடுகளின் பரப்பளவு இரு மடங்காக அதிகரிக்கலாம் என அஞ்சுகிறோம்," என்று அல்பர்ட்டா காட்டுத் தீயணைப்பு அதிகாரி சாட் மோரிசன் தெரிவித்தார்.

ஹாங்காங் அளவிற்கு அல்லது நியூயார்க்கைப் போல் ஒன்றேகால் மடங்கு பரப்பளவில் பற்றி எரிந்து வரும் தீ காரணமாக சுமார் 88,000 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 1,600 கட்ட டங்கள் முற்றிலும் தீக்கிரையாகி விட்டன. நகர் முழுதும் தீ பரவியுள்ள நிலையில் ஃபோர்ட் மெக்மரே நகர மக்கள் அங்கிருந்து வெளியேறி புகலிடம் தேடி அருகிலுள்ள எட்மாண்ட்டன் போன்ற நகரங் களுக்குச் செல்கின்றனர். "வீடுகள் உட்பட எல்லாமே தீயில் கருகிவிட்டன. சொந்த ஊரைவிட்டு வெளியேறுவது ஏதோ திரைப்படக் காட்சி போல இருக்கிறது," என்றார் கைக்குழந் தையுடன் எட்மாண்ட்டன் நகரில் தஞ்சம் புகுந்துள்ள மோர்கன் எலியட்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!